வியாழன், 27 ஜூன், 2013

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 3

முந்தைய பதிவின் தொடர்ச்சி..

இந்த பதிவில் RISK அதிகமுள்ள பங்குசந்தையை பார்க்கலாம்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் அது என்ன என்று தெரிந்து கொள்வது மிக அவசியமாகிறது.


பங்குச்சந்தை ஒரு சூதாட்டமா?

எனக்கும் என் மனைவிக்கும் ஒரு நாள் நடந்த உரையாடல்.

மனைவி :
UKல ஒரு கிழவிக்கு 360 கோடி லாட்டரி விழுந்திருக்கிறது. எனக்கும்  ஜோதிடர் ராஜ யோகம்னு சொல்லி இருக்கிறார். அதனால நானும் ஒரு லாட்டரி வாங்கிறேன்.
நான்:
அதிர்ஷ்டத்தால் வர்ற பணத்துல த்ரில்லிங் இருக்காது.
மனைவி:
அப்ப உங்க ஷேர்ல வர பணமும் சூதாட்டம் தான.


இந்த உரையாடல் பங்குச்சந்தை பற்றி தெரிந்துகொள்ள விரும்பாதவர்களுக்கும் பொருந்தும். நானும் பங்கு சந்தை வருவது முன் இப்படி தான் எண்ணி கொண்டிருந்தேன்.







ஒருவர் ஒருதொழில் ஆரம்பிக்க விரும்புகிறார். ஆனால் அவரிடம் அதற்கான பணம் இல்லை. கடன் வாங்குவதற்கு பதிலாக ஒருவரை பங்குதாரராக சேர்க்க விரும்புகிறார். அவர் அந்த பங்கிற்கு லாபத்தை பகிர்ந்து கொடுக்கிறார்.இது எந்த வகையில் சூதாட்டமாக முடியும்?. 

இப்படி சூதாட்டம் என்று கருதி முதலீடு செய்யாமலிருந்தால் இன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு தொழிலையும் தனி மனிதனால் ஆரம்பிக்க முடியாது. எல்லா தொழிலும் அரசே ஆரம்பிக்க வேண்டும்.ஆனால் அரசின் வேலை குடி மக்களை பாதுகாப்பதும்,நெறி முறைகளை வகுப்பது மட்டும் தான் தவிர எல்லா தொழிலையும் நடத்துவதல்ல.

ஆனாலும் பங்கு முதலீட்டை ஒரு சிலர் DAY TRADING என்ற பெயரில் சூதாட்டமாக மாற்றி உள்ளார்கள் என்பதும் நிதர்சனமான உண்மையே. 

ஆனால்  LONG TERM TRADING முதலீடுகள் நிறுவன வர்த்தகத்தின் அடிப்படையிலே நடந்து வருகிறது. இதனை சூதாட்டம் என்று கருத முடியாது. இந்த முறையில் ஒரு நிறுவனத்தின் கடந்த கால செயல்திறன்,  எதிர் கால வாய்ப்புகள் என்பவற்றை கருத்தில் கொண்டு முதலீடு செய்யப்படுகிறது. 
ஒரு நிறுவனம் சராசரியாக குறைந்தபட்சம்  20% வளர்ச்சி அடைய வேண்டும் என்று எதிர் பார்க்கலாம். சில சமயங்களில் சந்தை ஏற்ற, இறக்கங்களால் குறைந்த விலைக்கு கிடைக்கும். அந்த சமயங்களில் (உண்மையான விலை - குறைந்த விலை) + 20% என்று அதிக லாபம் கிடைக்கும். 

English Summary:
Why stock market is really needed for each person and country? Stock investments are not the gambling methods to make easy money.

பதிவு பெரிதாகி விட்டதால் அடுத்த பதிவில் தொடர்கிறேன்...
தொடரும்..

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 4


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக